உங்களது மொபைல் அல்லது கணிப்பொறியில் உங்களுக்கு விருப்பமான பிரவுசரை ஓபன் செய்யவும்.
அதில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தை தேடவும்.
இப்போது அந்த இணையதளத்தின் முகப்பு பக்கம் ஆனது தோன்றும்.
அதில் வலது பக்கத்தில் இருக்கும் லிங்க் ஆதார்(Link Aadhaar) என்ற தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்களது பான் கார்டு என்னுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான ஒரு படிவம் திரையில் தோன்றும் அதில் முதலில் உங்கள் பான் நம்பர் பதிவு செய்யவும்.
பிறகு உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
ஆதார் எண்ணை பதிவு செய்தபிறகு உங்கள் ஆதார் கார்டில் உள்ளவாறு உங்களது பெயரை இங்கு பதிவு செய்யவும்.
அங்கு உள்ள நிபந்தனைக்கான டிக் பாக்ஸ் படிக் செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள காபிட்ச கோடை என்டர் செய்துவிட்டு லிங்க் ஆதார்(Link Aadhaar) என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது உங்களுக்கான பேன் கார்ட் என்னுடன் ஆதார் கார்டு எண்ணை இணைப்பதற்கான வேண்டுகோள் வெற்றிகரமாக பதிவாகிவிடும்.
உங்களது இந்த வேண்டுகோளில் நிலையை சரிபார்க்க

இந்த வலைப்பக்கத்தின் முகப்பில் லிங்க் ஆதார் என்ற தேர்வை தேர்வு செய்த பிறகு அந்த பக்கத்தின் மேல் பகுதியில் வியூ ஸ்டேட்டஸ் (View Status) லிங்கை கிளிக் செய்யவும் இப்போது உங்களது கோரிக்கைக்கான நிலையை சரி பார்ப்பதற்கான படிவம் வரும் அதில் உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை பதிவு செய்து வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்(View Link Aadhaar Status ) என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான கோரிக்கை நிலையை தெரிந்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக